Sunday, March 1, 2020

LDSP Launching Program

கிழக்கு மாகாண உள்ளூர் அபிவிருத்தி உதவி செயற்றிட்டத்தினை அறிமுகப்படுத்துவதும், ஆரம்பித்து வைப்பதற்கான நிகழ்வு கடந்த 23.08.2019 வெள்ளிக்கிழமை திருேகாணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் தலைமையில் வைபவரீதியாக நடைபெற்றது.இந்நிகழ்வில் உலக வங்கியின் செயலணித் தலைவி யரிஸா லிங்டோ சொமர், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பப்ரிஸோ, பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தன, கிழக்கு மாகாண முதலமைச்சு, உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார மற்றும் பிரதிப் பிரதம செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 கிழக்கு மாகாணம் உள்ளடங்களாக வட மத்திய மாகாணம், ஊவா மாகாணம், வட மாகாணம் ஆகிய நான்கு மாகாணங்களிலும் இத்திட்டமானது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
 கிழக்கு மாகாணத்தில் இயங்குகின்ற 45 உள்ளூராட்சி மன்றங்களின் சேவை வழங்கும் திறனை விருத்தி செய்து, அதனூடாக மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கக் கூடிய இயல்பு நிலையை உருவாக்கும் வகையில் இத்திட்டம் அமையப் பெறவுள்ளது. அவ்வடிப்படையில் செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து, கிழக்கு மாகாண அனைத்து உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், செயலாளர்கள் மற்றும் மேற்படி செயற்றிட்டத்திற்காக சபை ரீதியில் உருவாக்கப்பட்டுள்ள செயற்றிட்ட குழுவினருக்கான விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறையும், செயற்றிட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் நிகழ்வும் அன்றைய தினம் இடம்பெற்றது.