UNDP நிறுவனத்தின் அனுசரணையில் COVID-19 தொற்றிலிருந்து கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்குட்பட்ட பிரதேசங்களை பாதுகாக்கும் செயற்திட்டத்தின் கீழ் COVID-19 தொற்று நீக்கத்திற்கு தேவையான பாதுகாப்பு உடைகள், தொற்று நீக்கி இரசாயனங்கள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றை கிழக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்திற்கு கையளிக்கும் நிகழ்வு உள்ளுராட்சி ஆணையாளர் நா.மணிவண்ணன் அவர்களின் ஒழுங்மைப்பின் கீழ், 06.07.2020 ஆம் திகதி திங்கட் கிழமை கிழக்கு மாகாணப் பிரதம செயலாளர் துசித P. வனிகசிங்க அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அதற்கைமவாக, கையளிக்கப்பட்ட 3 PLY Disposable Face Mask, Sodium Hypochlorite 1%, Hand Sanitizer, Non-Contact Infrared Thermometer, Safety Overalls, Disposable Boot Covers மற்றும் Power Sprayer அடங்கிய பொதிகள் 2020.07.09 ஆம் திகதி உள்ளுராட்சி திணைக்களத்திற்குட்பட்ட மாநகர சபைகள்(03) மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகங்களுக்குச் (அம்பறை மற்றும் மட்டக்களப்பு) சென்று அவ் அலுவலக உத்தயோகத்தர்களிடம் முறையாக வழங்கப்பட்டதோடு திருகோணமலை உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு 2020.07.10 ஆம் திகதி வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்..